வெந்து தணிந்தது காடு படத்தில் வருகின்ற ‘மல்லிப்பூ வெச்சி வெச்சி வாடுதே ’ என்கிற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் இன்று பகிர்ந்து கொண்டுள்ளனர்.
"ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற"
என்கிற மயக்கும் வரிகளை கொண்ட, இணையம் முழுவதும் வைரலாகிய இந்த பாடலை எழுதியவர் கவிஞர் பாடலாசிரியர் தாமரை. இதற்கு இசையமைத்தவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் . இந்த வைரல் பாடலை தனது மயக்கும் குரலால் பாடியவர் மதுஸ்ரீ . இந்த பாடலுக்கு நடனமாடியவர்கள் சிம்பு மற்றும் சித்தி இத்தானி.
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ஆர் இசையில் உருவாகியிருந்த அனைத்து பாடல்களும் திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும் படியாகவும் அமைந்திருந்தது. அதில் குறிப்பாக பாடலாசிரியர் தாமரை எழுதிய ‘மல்லிப்பூ’ பாடல் பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியதோடு பல மில்லியன் பார்வையாளர்கள் விரும்பி கேட்கும் பாடலாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த மல்லிப்பூ பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளதோடு, சமூக வலைத் தளத்தில் ரசிகர்கள் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பதிவிட்டும் வருகின்றனர்.