மனிதன் Vs கடவுள்: உலகையே அதிர வைத்த டார்வின்.

மனிதன் Vs கடவுள்:  உலகையே அதிர வைத்த டார்வின்.

19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என அனைத்து மக்களும் நம்பி வந்தனர். பிரிட்டனை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் மக்களுக்கு அறிமுகமாகும் வரை, எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர். டார்வின்தான் முதன் முதலில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார். மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கமளித்தார். இந்த விளக்கம் தான் வரலாற்றில் டார்வினை முக்கிய விஞ்ஞானியாக மாற்றியது. 

தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப் படுத்த 20 ஆண்டுகள் ஆனது. தனது 22 ஆம் வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி நீண்ட பயணத்தை மேற்கொண்டார். HMS Beagle என்ற கப்பலில் ஏறி டார்வின் தென் அமெரிக்காவுக்கு பயணித்தார். மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயமளித்த தொல்லியல் படிமங்களை அங்கு சேகரித்தார். 

பின்னர் Galapagos தீவுகளுக்குச் செல்லும்போது, அங்கு பிரம்மாண்ட ஆமைகளைக் கண்டார். அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில் வெவ்வேறு விதமான தனித்துவமான பண்புகளுடன் விளங்கின. எங்கெல்லாம் அதிக உணவு கிடைக்கிறதோ அங்கிருந்த ஆமைகளின் கழுத்து சுருக்கி இருந்தது.  ஆனால் வறண்ட தீவிலிருந்த ஆமைகளின் கழுத்து நீண்டு காணப்பட்டது. 

 ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும். ஒருபுறம் தீவின் நீண்ட கழுத்துடைய உயிரினங்கள் உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மறுபுறம் மிகக் குறுகிய கழுத்துடைய உயிரினங்கள் தரை மட்டத்திலுள்ள உணவுகளை உட்கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும். 

புதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனித்ததன் மூலம், ஒரு இனம் பிழைப்பதற்கு அதிகம் போராட வேண்டியுள்ளது என்பதை அவர் உணர்ந்தார். எந்த இனம் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அந்த இனம் தொடர்ந்து உயிர் வாழ முடியும். தன்னை மாற்றிக் கொள்ளாத இனம் அடுத்த சந்ததியே இல்லாமல் மறைந்து விடுகிறது. மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கின்றன. மாற்றத்தால், இவை புதிய இனமாக மாறாதவாறு, தங்கள் குட்டிகளுக்குப் பயிற்சியளிக்கின்றன. 

மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்திலிருந்து உருவானது என டார்வின் கூறுகிறார். அப்போதிலிருந்து இந்த கிரகத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தது. டார்வின் 1859 ஆம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிரபலமானார். அவருடைய கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது. பன்முகத்தன்மை கடவுளிடமிருந்து வந்தது அல்ல, அறிவியலிலிருந்து வந்தது என விளக்கமளித்து, மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின். 

எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான், மனித இனத்தையும் டார்வின் வைத்தார். அதே சமயம் பரிணாம வளர்ச்சி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என கத்தோலிக்க தேவாலயம் அறிவித்தது. இன்று 160 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கோட்பாடு பரவலாக அறியப்படுகிறது. 

தற்போது பரிணாம வளர்ச்சியானது உண்மை என்பதை நாம் அனைவருமே அறிந்திருப்போம்.  பூமியின் தன்மை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக அதன் வழியிலேயே பயணிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com