சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலைக்கு வருகைதரும் பக்தர்கள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது;
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சபரிமலை ஶ்ரீஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக அகற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரவோ, உபயோகப்படுத்தவோ வேண்டாம்.
மேலும், சபரிமலையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 1,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பணியில் இருக்கும் போலீசாருக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
-இவ்வாறு கலக்டர் திவ்யா தெரிவித்துள்ளார்.