மணிப்பூரில் 4 மாதங்களுக்கு பிறகு இணைய சேவை!!

மணிப்பூரில் 4 மாதங்களுக்கு பிறகு இணைய சேவை!!

Published on

ன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில், கடந்த மே மாதம் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அதிகரித்து வந்த கலவரத்தை கட்டுப்படுத்த மே மாதம் 3-ம் தேதி இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கலவரக்காரர்களுக்கு இடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கலவரம் படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில், இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பிரேன் சிங், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக கூறினார். எனவே சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு இணைய வசதி கிடைக்கும் என்றார். அதன்படி மீண்டும் பொதுமக்களுக்கு இணைய சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com