ஒரு மாதமாக நீடித்துவரும் மணிப்பூர் கலவரம் எதிரொலி: பதவி விலகப்போவதில்லை என முதல்வர் பீரேன் சிங் அறிவிப்பு!

ஒரு மாதமாக நீடித்துவரும் மணிப்பூர் கலவரம் எதிரொலி: பதவி விலகப்போவதில்லை என முதல்வர் பீரேன் சிங் அறிவிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 16 நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் கலவரத்தின் எதிரொலியாக அம்மாநில முதல்வர் பீரேன் சிங் கலவரத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று தல்வர் பீரேன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் தொடந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை பீரேன் சிங் ராஜிநாமா செய்ய இருப்பதாக செய்தி பரவியதை அடுத்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்த நெருக்கடியான இந்த சூழ்நிலையில் நான் பதவி விலகப்போவதில்லை என்று முதல்வர் பீரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3 ஆம் தேதி முதல் மோதல் நடந்துவருகிறது. அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 120 பேர் பலியாகியுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட 40,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை காங்கோக்பி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் நடந்த மோதலில் மேலும் 3 பேர் பலியானதை அடுத்து கலவரங்களுக்கு பொறுப்பேற்று முதலவ்ர பீரேன் சிங் பதவி விலகப்போவதாக வெள்ளிக்கிழமை காலை செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து முதல்வரின் இல்லம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் மற்றும் பெண்கள் கருப்பு உடை அணிந்து முதல்வர் பதவி விலக்க்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்ற முதல்வரை தடுத்து நிறுத்தினர். பதவி விலக வேண்டாம் என முதல்வரை சமாதானப்படுத்தினர். இதைத் தொடர்ந்து நெருக்கடியான சூழலில் பதவி விலகப்போவதில்லை என்று முதல்வர் பீரேன் சிங் கூறினார். எனினும் கிழிக்கப்பட்ட ராஜிநாமா கடித்த்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மணிப்பூருக்கு இரண்டுநாள் பயணமாக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெள்ளிக்கிழமை மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் கூறுகையில் மணிப்பூர் மக்களின் வலி எனக்கு புரிகிறது. ஆனாலும், மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து சமுதாய மக்களும் முனைப்பு காட்ட வேண்டும். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com