வைரமுத்துவை அழைக்கவில்லையா?  மணிரத்னம் சரவெடி பதில்கள்

MANIRATHNAM
MANIRATHNAM

சென்னையில் பொன்னியின் செல்வன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதில் திரைப்படம் குறித்த பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் "குண்டக்க மண்டக்க" என கேட்டு வைக்க மணிரத்னமோ " ரண்டக்க ரண்டக்க" என அசராமல் பதிலளித்தார்.

நிருபர் ஒருவர் " தமிழ் குறித்த நிகழ்வுகளில் கலைஞர் அவர்களே வைரமுத்து அவர்களை அருகில் அழைத்து அமர்த்தி கொள்வார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைரமுத்து அவர்களை நீங்கள் இவ்விழாவிற்கு அழைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

VAIRAMUTHU
VAIRAMUTHU

அதற்கு நிதானமாக பதிலளித்த மணிரத்னம் அவர்கள் "வைரமுத்து மூத்த தமிழறிஞர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . ஆனால் அவரை போல ஏராளனமான தமிழறிஞர்கள், திரைப்படைப்பாளிகள், தமிழார்வலர்கள் திறைத்துறையில் உண்டு” என திறமையாக பதிலளித்திருந்தார்.

மற்றொரு நிருபர் அதே போன்று  "டைரக்டர் பார்த்திபன் அவர்கள் புதுமை விரும்பி எதையும் பரபரப்பாக ஆர்வமாக செய்யக்கூடியவர். அவரை எப்படி உங்களுக்கேற்றாற் போல் நடிக்க வைத்தீர்கள்" என கேட்டதற்கு மணிரத்னம் மிக அருமையான பதிலையளித்தார்.

பார்த்திபன் முதலில் ஒரு டைரக்டர். அதன் பிறகே அவர் நடிகர். அவருக்கு எங்கே, எவ்வளவு, எப்படி தரவேண்டும் என்பதை அவர் நன்றாக அறிவார். நீங்கள் கவலைபடத் தேவையில்லை என ருசிகரமாக பதிலளித்திருந்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com