சென்னையின் முதல் கோடை மழை; மகிழ்ச்சியில் மக்கள்..!

மழை
மழை
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் வேளையில் சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கருமையாக காணப்பட்டது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசிய நிலையில் தற்போது முதல் கோடை மழையை சென்னை அனுபவிக்கிறது

சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது.  காற்றழுத்த தாழ்வு பகுதி, மற்றும் வளிமண்டல சுழற்சியின் காரணமாகவும் மற்றும்  வெப்பச் சலனம் காரணமாகவும் இந்தக் கோடை மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்யும் இந்த முதல் கோடை மழையால், மக்கள் வெப்பத்திலிருந்து தப்பித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் 1:00 மணி வரையிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com