

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் வேளையில் சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கருமையாக காணப்பட்டது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசிய நிலையில் தற்போது முதல் கோடை மழையை சென்னை அனுபவிக்கிறது
சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி, மற்றும் வளிமண்டல சுழற்சியின் காரணமாகவும் மற்றும் வெப்பச் சலனம் காரணமாகவும் இந்தக் கோடை மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்யும் இந்த முதல் கோடை மழையால், மக்கள் வெப்பத்திலிருந்து தப்பித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் 1:00 மணி வரையிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.