மார்ச் 13 - காமன்வெல்த் தினம்!

மார்ச் 13 - காமன்வெல்த் தினம்!

Published on

ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையில் கொண்டாடப்படும் தினம் இது. இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி இந்தத் தினம் வருகிறது. இந்த தினத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் ‘காமன்வெல்த்’ என்றால் என்ன என்று லேசாகப் பார்ப்போமா?

இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து, பின்னர் விடுதலையான நாடுகளே காமன்வெல்த் நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

1958ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுவது இந்தத் தினம்.

இங்கிலாந்து மற்றும் சக காமன்வெல்த் நாடுகளுடன் பேணும் நல்லுறவின் அடையாளமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. காமன்வெல்த் நாடுகளின் மொத்தப் பரப்பு ஏறக்குறைய உலகின் நிலப் பரப்பில் கால் பங்கு அளவு இருக்கும். அதாவது 2,99,58,050 சதுர கிலோமீட்டர்களுக்கும் மேல்!

இந்த வாரம் முழுக்க காமன்வெல்த் தொடர்பான கருத்தரங்கங்கள், விவாதங்கள், கொடிகளை ஏற்றுதல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்துகின்றனர்.

11.03.2013ஆம் ஆண்டு எலிஸபெத் மகாராணியாரால் காமன்வெல்த் சாஸனம் கையொப்பமிடப்பட்டு பத்தாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி இந்த ஆண்டு கூடுதல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்து முன்வைக்கப்படும். இந்த ஆண்டு காமன்வெல்த் நாளில் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்து ‘Forging a sustainable and peaceful common future’ என்பதாகும்.

logo
Kalki Online
kalkionline.com