மார்ச் 3 - உலக வன உயிரின நாள்!

மார்ச் 3 - உலக வன உயிரின நாள்!
Published on

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தன்னுடைய 68வது அமர்வின்போது ‘உலக வன உயிரின நாளாக’ மார்ச் 3ஆம் தேதியைத் தேர்வுசெய்துள்ளது. வன உயிரினம் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். வன விலங்குகள் மட்டும் அல்லாமல் அரிய வகைத் தாவரங்களையும் சேர்த்துப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘வன உயிரினம்’ (wildlife) என்கிறார்கள். (இந்தியாவில் வன உயிரின வார விழா ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.)

இதற்கெனவே 179 சர்வதேச நாடுகளுக்கிடையில் CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்ற ஓர் ஒப்பந்தம் நிலவுகிறது. இதன்படி வன உயிரினம் தொடர்பான வணிகம் நடைபெறும்போது, சம்பந்தப்பட்ட இனம் அழிந்துபோகும் அபாயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே நோக்கம் ஆகும்.

அறிவியல், கல்வி, கலாச்சாரம், பொழுதுபோக்கு, அழகியல் போன்ற பல வழிகளிலும், வன உயிரினங்கள் மனித குலத்துக்குச் செய்யும் சேவைகள் இந்தத் தினத்தில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மனதில் வன உயிரினப் பாதுகாப்பு ஆழமாகப் பதியும் வண்ணம், பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றுக்குச் செல்வது, வனச் சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்றவை உலகெங்கும் இந்தத் தினத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. விழிப்புணர்வு முகாம்கள், நடைப்பயணங்கள், பேரணிகள், தெருமுனை நிகழ்ச்சிகள்  போன்றனவும், வன உயிரினம் தொடர்பான ஓவியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com