கமலை மேடையில் தெறிக்கவிட்ட மாரி செல்வராஜ் தேவர் மகன் பட சர்ச்சை!

கமலை மேடையில் தெறிக்கவிட்ட மாரி செல்வராஜ் தேவர் மகன் பட சர்ச்சை!

'மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமலை மேடையில் வைத்து கொண்டே ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.

கமல்ஹாசன் உருவாக்கிய ‘தேவர் மகன்’ திரை படம் நாட்கள் தாண்டியும், திரைக்கதையில் ஒரு மைல்கல்லாக இருக்கிறது.

இது குறித்து மேடையில் மாரி செல்வராஜ் பேசும் போது "நான் ‘பரியேறும் பெருமாள்’ எடுக்கும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுதான் எடுத்தேன். ‘கர்ணன்’ பண்னும்போதும் ‘தேவர் மகன்' பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ’மாமன்னன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்' பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். வடிவேலு நடித்தஅந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப் படம்" என்று பேசியிருந்தார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படம் தான் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும்இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின், ஃபஹத்பாசிலுடன் இப்படத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்தச் சூழலில் தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்வு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்துவிழா மேடையில் கமல்ஹாசன் முன்னிலையிலேயே ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசிய இந்த கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

மாரி செல்வராஜ் பேசியதன் கருத்து என்பது இதுதான் ’மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே‘தேவர் மகன்’ படம்தான். அப்படத்தை பார்த்த நாளிலிருந்து தான் ‘மாமன்னன்’ உருவானது. ’தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால்கடக்கமுடியவில்லை. சினிமாவாக பார்த்த ஒரு படம் சமூகத்தை எப்படி புரட்டிப்போடுகிறது? என்னவெல்லாம் செய்கிறது? அது சரியா? தவறா? என்றெல்லாம் உழன்று கொண்டிருந்தேன் என்றார் மாரி செல்வராஜ்.

இதனைத் தொடர்ந்து கமல் ரசிகர்கள் பலரும் ‘தேவர் மகன்’ குறித்த மாரிசெல்வராஜின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர். படத்தின் காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்து அது தொடர்பான விவாதங்களில்ஈடுபட்டு வருகின்றனர். மாரி செல்வராஜின் கருத்துக்கு ஆதரவாகவும் பலர் தங்கள்கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com