

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் தகுதியை பெற்ற தவெக கட்சி ஆட்சி அமைக்க அனுமதி வேண்டி ஆளுநரை சந்தித்தபோது ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண் 118 பெரும்பான்மையிடங்கள் குறித்து ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆட்சி அமைக்க மேலும் 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உடனடியாக தவெகவிற்கு தங்களது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவைத் தர முன் முன்வந்த நிலையில் தவெகவின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. மேலும் இடதுசாரிகள் அலுவலகத்திற்கு விஜய் நேரில் செல்ல இருப்பதாகவும் தகவல்.
தற்போது தவெக 107 , காங்கிரஸ் 5 , சிபிஎம் 2, சிபிஐ 2 மொத்தம் 116 இடங்களுடன் ஆட்சி அமைக்கத் தயார் நிலையில் உள்ளது. இடதுசாரிகளின் முடிவு எதுவோ அதுவே விசிகாவின் முடிவு என ஏற்கனவே அறிவித்திருந்தார் திருமாவளவன் .எனவே விரைவில் விசிக கட்சியின் ஆதரவும் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கிய நிலையில் சிபிஎம், சிபிஐ இரு கட்சிகளின் செயலாளர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
" பெரும்பான்மை இல்லாத நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமையவும் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் தவெகவிற்கு ஆதரவு தந்துள்ளோம்.ஒருவேளை திமுக அதிமுக கூட்டணி வந்தால் ஆதரிக்க மாட்டோம் .தவெக நீங்கலாக மற்ற கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. ஆளுநர் கட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவளித்தோம்.
மே 10 க்குள் தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும். மே 10க்குள் புதிய அரசு அமையாவிட்டால் கவர்னர் ஆட்சி அமைந்துவிடும் .எனவேதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தந்துள்ளோம்.
சிபிஐ, சிபிஎம் என்பது சுதந்திரமான கட்சி சுயமாகவே முடிவு எடுப்போம் .ஆளுநர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகவே தவெகவை ஆதரிக்கிறோம் .விஜயை ஆதரிக்க திமுகவின் அனுமதி தேவையில்லை. மத்திய அரசை எதிர்த்துப் போராடவே திமுகவுடன் பயணித்தோம் .
அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு. திமுக பெரும்பான்மை பெறாத நிலையில் அதனால் ஆட்சி அமைக்க முடியாது . தனிப்பெரும் கட்சியாக தவெக மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். திமுக உடனான கொள்கை ரீதியிலான உறவு தொடரும். விஜய் ஆட்சி அமைக்கக் கூடாது என ஸ்டாலின் எங்கும் கூறவில்லை.
சமீபத்திய தகவல்கள் படி நாளை காலை தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில் தி.நகரில் இணையவழி கூட்டத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் முன்கூட்டியே தனது முடிவை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிகவும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இணைய வழியில் விசிக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது திருமாவளவன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது