மசாபா குப்தாவின் ஹோம்மேட் ஃபேஸ் ஸ்கிரப்பர்!

மசாபா குப்தாவின் ஹோம்மேட் ஃபேஸ் ஸ்கிரப்பர்!

மசாபா குப்தா சிறந்த இந்திய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் மட்டுமல்ல மிகச்சிறந்த புதுமை விரும்பியும் கூட. அம்மா நீனா குப்தா போலவே இவருக்கும் ஹோம் மேட் அழகு சாதன முயற்சிகளில் மிகப்பெரிய விருப்பம் உண்டு. மசாபாவின் சருமம் காம்ப்ளெக்ஸ் வகைக்குள் வருவதால் செயற்கை அழகு சாதனப் பொருட்களைக் காட்டிலும் இயற்கையான முறையில் வீட்டில் தயாரித்து பயன்படுத்தக் கூடிய வகையிலான பியூட்டி டிப்ஸ்களே அவருக்கு பெரிதும் பயனளிக்கின்றன.

மசாபா தரும் ஹோம் மேட் ஃபேஸ் ஸ்கிரப்பர் உங்களுக்கும் பயன் தரக்கூடும். இதில் பக்க விளைவுகள் இருக்க வாய்ப்பில்லை. எனினும் முதல் முறை பயன்படுத்தக் கூடியவர்கள் ஒரு துளி எடுத்து முன் கை தோல் பகுதியிலோ அல்லது காது மடல்களுக்குப் பின்புறமோ அவற்றைத் தடவி 5 நிமிடங்கள் உலர விட்டுப் பாருங்கள். எரிச்சலோ, அரிப்போ இல்லா விட்டால் உங்கள் சருமம் அதை ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தம். இப்போது இதை உபயோகிக்க உங்களுக்குத் தடையேதும் இல்லை.

இனி மசாபா தரும் பியூட்டி டிப்ஸ் என்ன என்று பார்ப்போமா?

தொடர்ந்து முகப்பருத் தொல்லையால் அவஸ்தைப் பட்டு வந்த மசாபா அதிலிருந்து வெளிவர இந்த டிப்ஸ் உதவியதாகச் சொல்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தியது மூன்றே மூன்று பொருட்களைத்தான். அவை, முறையே பிரவுன் சுகர், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்.

தேவையானவை:

பிரவுன் சுகர்: 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு: 5 துளிகள்

தேங்காய் எண்ணெய்

அல்லது ஆலிவ் எண்ணெய்: ½ டீஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் பிரவுன் சுகர் எடுத்துக் கொண்டு அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ½ டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்கு மிக்ஸ் செய்யவும். எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் எனில் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது கிரேப் சீட் ஆயில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்கிரப்பரை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் இறந்த சரும செல்கள் இதன் மூலமாக உதிர்ந்து விடும். பிறகு முகத்தைக் கழுவித் துடைத்தால் முகப் புதுப் பொலிவுடன் பளிச்சென்று ஆகி விடும்.

இதில் பயன்படுத்தியது அனைத்துமே இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருட்களே என்பதால் பயன்படுத்தும் போது அச்சம் தேவையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com