ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரம்மாண்ட போர் பயிற்சி… 19 நாடுகள் பங்கேற்பு!

War practice in Australia
War practice in Australia
Published on

அமெரிக்கா இந்தியா உட்பட மொத்தம் 19 நாடுகள் ஆஸ்திரேலியாவில் ‘தாலிஸ்மான் சாப்ரே’ என்ற பெயரில் போர் பயிற்சி செய்து வருகின்றன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவில் 'டாலிஸ்மான் சேபர் 2025' (Talisman Sabre 2025) எனப்படும் பிரம்மாண்ட பன்னாட்டுப் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள 19 நாடுகளின் தரைப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள் என மொத்தம் 35 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சி, வீரர்களின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய பயிற்சியாக அமைந்துள்ளது.

டார்வின் மற்றும் குயின்ஸ்லாந்தின் பல்வேறு பயிற்சி மைதானங்களில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி, பல வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பப்புவா நியூ கினி, ஃபிஜி, டோங்கா, வனுவாட்டு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா என மொத்தம் 19 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. இந்தியாவும் இதில் கலந்துகொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சமையலில் சுவை அதிகரிக்க சில குறிப்புகள்..!
War practice in Australia

'டாலிஸ்மான் சேபர்' போர் பயிற்சி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தலைமையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், நாடுகளின் படைகளுக்கு இடையே உள்ள தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், பல்வேறு போர்ச் சூழ்நிலைகளை உருவகப்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்வதுமாகும். இதில் தரைவழித் தாக்குதல்கள், கடற்படைக் காட்சிகள், வான்வழிப் பாதுகாப்பு, சிறப்புப் படைகளின் நடவடிக்கைகள், இணைய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அரசியல் சவால்களுக்கு மத்தியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ செல்வாக்குக்கு மத்தியில், நட்பு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை இந்தப் பயிற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளாவிய பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் உறுதுணையாக இருக்கும் வகையிலும், இயற்கைப் பேரழிவுகள் போன்ற அவசர காலங்களில் இணைந்து செயல்படும் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் பயிற்சி ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்தப் பயிற்சியின் மூலம், அதில் பங்கேற்கும் நாடுகள் தங்கள் தற்காப்புத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதுடன், எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்படவும் உறுதிபூண்டுள்ளன. இது பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com