நடிகை
நடிகை

என்னுடைய கடைசிப் பதிவாக இருக்கலாம்! இரான் நடிகையின் ஆவேசம்!

Published on

இரானில் இரண்டு முக்கிய நடிகைகளான ஹெங்காமே காஸியானி, கட்டாயூன் ரியாஹி ஆகியோர் சர்ச்சையான சமூக ஊடகப் பதிவுகளுக்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இது இரான் மக்களிடையியே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இரானில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில், போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். அதைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் இரான் முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தால் இரானில் தொடர்ந்து அமைதியின்மை நிலவிவருகிறது.

இரானில் இரண்டு முக்கிய நடிகைகளான ஹெங்காமே காஸியானி, கட்டாயூன் ரியாஹி ஆகியோர் சமூக ஊடகப் பதிவுகளுக்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.ஹெங்காமே காஸியானி கைதுசெய்யப்படுவதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒருவேளை இது என்னுடைய கடைசிப் பதிவாக இருக்கலாம்.

ஹிஜாப்
ஹிஜாப்

இந்தத் தருணத்திலிருந்து, எனக்கு என்ன நடந்தாலும், எப்போதும்போல, என்னுடைய கடைசி மூச்சுவரை நான் இரானிய மக்களுடன் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்" எனப் பதிவிட்டு அவர் ஹிஜாப்பை பொதுத்தளத்தில் அகற்றி, தன் முடியைக் காண்பித்து அதைக் கட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இதே காரணத்துக்காக நடிகை கட்டாயூன் ரியாஹியும் கைதுசெய்யப்பட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு நடிகைகளும் விருதுபெற்ற பல திரைப்படங்களில் நடித்தவர்கள். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com