“தூக்கமும் கண்களை தழுவட்டுமே” அமைச்சரின் வேடிக்கையான வீடியோ பதிவு!

“தூக்கமும் கண்களை தழுவட்டுமே” அமைச்சரின் வேடிக்கையான வீடியோ பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை உலக தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது. தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல், ஆரோக்கியமான தூக்கத்தை மக்களிடம் வலியுறுத்துவதுதான் இதன் நோக்கம். போதுமான அளவு நல்ல தூக்கம் இருந்தால்தான் உடல் ரீதியிலும் மனரீதியிலும் ஆரோக்கியத்தை பேணமுடியும்.

உலக தூக்க சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த நாள் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். மக்கள் ஆரோக்கியமாக வாழ நல்ல தூக்கம் அவசியம் என்பதை வலியுறுத்தவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

நாகாலாந்தில் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் டெம்ஜென் இம்னா அலோங். மாநிலத்தில் பிரபலமான அரசியல்வாதி. சமூக வலைத்தளங்களில் தமது கருத்துகளை வித்தியாசமான முறையில் பதிவிட்டு நெட்டிஸன்களுக்கு கலகலப்பு ஏற்படுத்தி வருபவர்.

வாழ்க்கைக்கு தேவையான அறிவுரை, தனது சொந்த வாழ்க்கை சம்பவங்களை நெட்டிஸன்களிடம் பகிர்ந்துகொள்வார். சமூக வலைத்தளங்களில் வெளிவரும் விடியோக்களுக்கு நகைச்சுவையாக கருத்துக்களைத் தெரிவிப்பதிலும் வல்லவர்.

உலக தூக்க தினத்தை முன்னிட்டு இவர் வெளியிட்ட விடியோ வைரலாகியுள்ளது. அந்த விடியோவில் உலக தூக்க தினம் தொடர்பான ஒரு கருத்தரங்களில் பங்கேற்ற பலரும் விவாத நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் தங்கள் இருக்கையிலேயே தூங்கிவழிகின்றனர்.

அந்த விடிவோவின் கீழ் அலோங், “ஹாப்பி வேர்ல்டு ஸ்லீப் டே. இந்த நாளில் விழித்திருப்பவர்களை பாராட்டுவோம். 24 மணிநேரமும் விழித்திருப்பது நமது விருப்பம்தானே” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த விடியோ பலரையும் கவர்ந்துள்ளது. நெட்டிஸன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

உலக தூக்க தினத்தில் விழித்திருக்கும் உங்களுக்கு பாராட்டுகள் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர், நீங்கள் விசித்திரமானவர். உங்களைப் போன்ற நகைச்சுவை உணர்வுள்ள நபர் இருப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்று பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபர் நீங்களும் கண்களை மூடிக்கொண்டு தூங்குபவர்போல் நடித்திருக்கலாமே என்று குறிப்பிட்டுள்ளார்.

அலோங் சில நாள்களுக்கு முன்பு இரண்டு விடியோக்களை பதிவிட்டிருந்தார். அவை இணையதள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்த்து. முதல் விடியோவில் அவர் புன்னகையுடன் மற்றவர்களுடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். அதில் கேமரா லென்சுகள் பல எங்களை நோக்கி இருந்தாலும் நேரம் முக்கியம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு விடியோவில் இயற்கை எழிலுடன், இரவுநேரத்து விளக்கொளியில் ஜொலிக்கும் தலைநகர் கோஹிமாவை காட்சிப்படுத்தியிருந்தார். அந்த விடியோவில் “அழகு கொஞ்சும் கோஹிமா” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்ட இரண்டு விடியோக்களும் ரசிக்கும்படியாக இருந்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com