குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை கவர்ந்து உள்ள மக்களை தேடி மருத்துவ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் முன்மாதிரி திட்டமாக விளங்கி வருவதாகவும், இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் பயன்பெறுவதாகவும் ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை வளர்ச்சியை அடைந்த நாடுகளுக்கு இணையாக வழங்க உறுதி கொண்டிருக்கிறது. ஆகிய துறைகளை மேம்படுத்த திராவிட மாடல் அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சிறப்பு திட்டங்களில் மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து தமிழ்நாடு மாநில திட்ட கமிஷன் ஆய்வு செய்து ஒரு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. அதில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு பேர் உதவியாக தேர்வு உதவியாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான குடும்பங்கள் தனது மாத வருமானத்தில் 10% தொகையை மருத்துவ செலவிற்காக ஒதுக்குகின்றன. இதனால் குறைந்த வருமானமிட்டக்கூடிய குடும்பங்கள் மிகப் பெரிய சிரமத்தில் இருந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் அவர்களுக்கான செலவுகளை குறைத்து இருக்கிறது. வீடு தேடி சிகிச்சை கிடைப்பதால் மக்களும் பெருமளவில் இந்த திட்டத்தை வரவேற்று உள்ளனர் என்று திட்டக் குழுவின் மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், 1 கோடியே 51,661 பேர் இந்த திட்டத்தின் மூலம் முதல் சேவையாக பெற்று இருப்பதாகவும், 3 கோடியே 71, 896 பேர் தொடர் சேவைக்காக இத்திட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். குறிப்பாக கிராமப்புற பகுதி மக்கள் இந்தத் திட்டத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com