

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், பெண்கள் தொடர்பான வழக்கிற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியது பெரும் அமளியை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.
முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் ஆதாரம் இன்றி பேசிய கருத்துக்கள் அனைத்தையும் உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எ.வ.வேலு திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது (மிசா கைது)செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி. எனவே அதை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக கூறினார்.
இதனால் கோபம் அடைந்த திமுகவினர் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் நின்று கொண்டு தொடர்ந்து முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் உத்தரவை தொடர்ந்து திமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.