சீனாவின் எச்சரிக்கையை மீறி திபெத்திய தலைவரை சந்தித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்… அவ்ளோதான் இனி!

Thalai Lama
Tibet Head Thalai Lama
Published on

சீனாவின் எச்சரிக்கையை மீறி வம்பிழுக்கும் விதமாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திபெத்திய தலைவர் தலாய் லாமாவை சந்தித்து பேசியுள்ளனர். இதனால், ஏற்கனவே போர் மூடில் இருக்கும் சீனாவிற்கு மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா, தைவான் எங்களது ஒரு அங்கம் என்று கூறி மோதல் போக்கை கையாண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது கடல் வழியாகவும், வான் வழியாகவும் சீனா தைவானை சுற்றி வளைத்துள்ளது. இது ஏற்கனவே உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலையில், தற்போது மற்றொரு பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது.

அமெரிக்கா சமீபக்காலமாக அனைத்து நாடுகளின் பிரச்சனைகளிலும் தலையிட்டு, போர்களில் தனக்கு சாதகமான நாட்டுக்கு பண ரீதியாகவும் ஆயுதங்களும் கொடுத்தும் உதவி செய்து வருகிறது. தானாக சென்று தலையிட்டு பிரச்சனையை வலுவாக்கிவிடுகிறது. அதேபோல் சீனாவின் உள்நாட்டு பிரச்சனைகளிலும் தலையிடுகிறது. அமெரிக்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசியின் தலையீடு முன்பு அதிகமாக இருந்தது. ஆகையால், தற்போதும் அவரை வைத்தே காய் நகர்த்தப்படுகிறது.

அதாவது, திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவை பெலோசி தலைமையிலான அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புக்கு சீனா ஏற்கெனவே கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. ஆனாலும், வழக்கம் போல இதை கண்டுக்கொள்ளாமல் அமெரிக்கா பெலோசியை இறக்கி ஆழம் பார்த்திருக்கிறது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் நிலவியுள்ளது.

இதனையடுத்து தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் இந்தியாவின் தர்மசாலாவில் தலாய் லாமாவைச் சந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா வருவதற்கு முன்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'தலாய் லாமாவுடன், சீனா ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த குழுவும் தலைவர் மைக்கேல் மெக்கால், திபெத்திய புத்த மதத்தை சீனா கட்டுப்படுத்த முயல்கிறது என்றும், திபெத்துக்கு எங்களுடைய முழு ஆதரவு இருக்கிறது என்றும், தலாய் லாமாவுடன், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய நேரம் இது என்றும் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வெடிகுண்டு மிரட்டல்… சென்னை நோக்கி வந்த விமானம் பாதியிலேயே தரையிறக்கம்!
Thalai Lama

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பற்ற தீர்மானம் என்னவென்றால், திபெத்திய வரலாறு குறித்தும், மக்கள் குறித்தும் சீனா கூறும் கருத்துக்களுக்கு எதிராக போராட அமெரிக்கா நிதி வழங்கும் என்பதாகும்.

இந்த ஆதரவானது, போர் முடிவில் இல்லாத சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், இனி சீனா என்ன செய்யப்போகிறது என்பதே பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. திபெத், தைவான் என ஒரே நேரத்தில் இரண்டை சமாளிக்குமா சீனா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com