கிறிஸ்துமஸ் பண்டிகையும், சிறந்த சுற்றுலாவும்...

கிறிஸ்துமஸ் பண்டிகையும், சிறந்த சுற்றுலாவும்...
Published on

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25-ஆம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.  கிறிஸ்துமஸ் பண்டிகை வர சில தினங்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் பலரும் தங்களுடைய பண்டிகை கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

 பண்டிகையையொட்டி ஷாப்பிங் போவது, கேக் ஆர்டர் செய்வது மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என  பண்டிகை களை கட்டியுள்ளது. 

வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விரும்பினால், அதற்கு ஏற்ற சிறந்த இடம் தாய்லாந்து நாடுதான்.

பாங்காங் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படுவதால் விடுமுறையை கழிப்பதற்கு இந்த நகர் ஒரு ஏற்ற இடமாக இருக்கும். அதன்பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாய்லாந்தில் உள்ள அனைத்து கடைகளும் கண் கவர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் தாய்லாந்தில் எதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாம் என்பதற்கான 6 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

அதன்படி முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் போது யாருக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம். பண்டிகைக்கு என்ன மாதிரியான பொருட்களை வாங்கலாம் என்பதுதான் பலருக்கும் டென்ஷன் ஆக இருக்கும். ஆனால் தாய்லாந்தில் அந்த டென்ஷன் இருக்காது. பூகெட் பகுதியில் ஷாப்பிங் செய்யும்போது உங்களுடைய டென்ஷன் எல்லாம் மறந்து மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுவீர்கள். அதன் பிறகு உலகின் சிறந்த கடற்கரைகள் தாய்லாந்தில்‌ அமைந்துள்ளதால் இங்குள்ள கடற்கரை மணலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதும் ஒரு தனி சிறப்புதான்.

இதனையடுத்து தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் புத்தாண்டு பண்டிகை வரை இரவு நேரத்தில் பார் கிராலிங்கில் மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். 

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தாய்லாந்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் பாரம்பரியமான அதாவது சிறந்த ஓரியண்டல் உணவை மக்களுக்காக வழங்குகின்றனர். தாய்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அனைத்துக்கும் விலை மலிவாக இருப்பதால் பட்ஜெட் சுற்றுலாவுக்கு இது ஒரு சிறந்த இடமாகும். மேலும் குளிர்காலத்தை விரும்பாதவர்கள் ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலையாக இருக்கும் தாய்லாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com