ஐந்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு $250K நிதி அறிவித்த மெட்டா நிறுவனம்.

ஐந்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு $250K நிதி அறிவித்த மெட்டா நிறுவனம்.
Published on

நேற்று இந்தியாவில் ஒரு புதிய மிக்ஸட் ரியாலிட்டி திட்டத்தை அறிவித்து, அதில் இந்திய ஸ்டார்ட் அப் மற்றும் டெவலப்பர்க்கு $250K அமெரிக்க டாலர்கள் மானியமாக வழங்கியது மெட்டா நிறுவனம். 

இந்த நிதியைப் பயன்படுத்தி, நாட்டில் புதிய தொழில் யோசனைகளை வளர்க்கவும், சிறந்த மிக்ஸட் ரியாலிட்டி தொழில்நுட்பங்களை உருவாக்கவும் மெட்டா முயல்கிறது என அந்நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. மிக்ஸட் ரியாலிட்டி தொழில்நுட்பம் என்பது நிஜ உலகில் இருந்து, மெய்நிகர் பொருட்களுடன் தொடர்புகொள்ள உதவும் வகையில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை இணைத்த ஒரு சூழலாகும். மேலும் இந்த நிதியானது, மெட்டாவின் பிரசன்ஸ் பிளாட்பார்ம், மெட்டா குவெஸ்ட் பிளாட்பார்ம் மற்றும் மெட்டாவர்ஸ் ஆகியவற்றிற்கான, ஏஐ திறன்களைப் பயன்படுத்தி டெவலப்பர்களுக்கு செயலிகளை உருவாக்க உதவும் என தெரிவித்துள்ளனர். 

இந்தத் திட்டம் சார்ந்த அறிவிப்பின்போது இந்தியாவைச் சேர்ந்த ஐந்து டெவலப்பர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் குழுக்களுக்கு, மெட்டார் ரியாலிட்டி லேப்ஸ் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் நிதியுதவி செய்யப்பட்டது. மேலும், மெட்டா குவெஸ்ட் லேபில், தங்களது தயாரிப்புகளை பதிவேற்றி, மெட்டா நிறுவனத்தின் வளர்ந்து வரும் டெவலப்பர் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு பகுதியாக மாற, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என மெட்டா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய இந்தியாவின் மெட்டா துணைத் தலைவர் சத்யா தேவநாதன், "இந்தியாவில் XR சுற்றுச்சூழலை விரைவில் உருவாக்க மெட்டா நிறுவனம் முயற்சித்து வருகிறது. எங்களின் பிரசன்ஸ் பிளாட்பார்ம் என்பது மெட்டாவேர்ஸ் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது எல்லா தரப்பு மக்களும் மெய்நிகர் அனுபவங்களை அணுகக் கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது நாங்கள் வழங்கிய நிதியும் VR & MR அனுபவங்களை உருவாக்குவதை விரைவுப்படுத்தி, இந்திய டெவலப்பர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் உலகளாவிய செல்வாக்கை அடையும் வாய்ப்பை வழங்கும்" எனத் தெரிவித்தார். 

மெட்டா நிறுவனம் ஏன் இந்த தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால், உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டேடிஸ்டா வெளியிட்ட அறிக்கையின் படி, விர்ச்சுவல் ரியாலிட்டி சந்தையானது 2022 நிலவரப்படி 29 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தது. இது 2026 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என அந்நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்தது. 

இதன் காரணமாகவே ஆப்பிள், மெட்டா போன்ற டெக் நிறுவனங்கள் மெய்நிகர் தொழில்நுட்பங்களில் தன் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com