கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

கனமழை
கனமழை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இன்று காலை முதல் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலும், தமிழகத்தின் பல பகுதியிலும் சில நேரங்களில் லேசானதும், பல நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

மத்திய மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்.

மழை
மழை

சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், 7, 8ம் தேதிகளில் கனமழை பெய்யும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com