கேரளாவில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் எதிரொலியாக தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு!

கேரளாவில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் எதிரொலியாக  தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடற்படை இணைந்து 12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு படையினருக்கு, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மிகப்பெரிய சரக்கு கப்பலில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய நிறுவனம் ஒன்று போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கேரளா மாநிலம் கொச்சி அருகே கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தடுத்தனர்.

சோதனையில் 2500 கிலோ கொண்ட ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென்மாநிலங்கள் வழியாக இவ்வளவு கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவது இதுவே முதல் முறை என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 3500 கிலோ மெத்தபெட்டமைன், 500 கிலோ ஹெராயின், 529 கிலோ ஆசிஸ் ஆயில் போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் இந்திய கடேலார பகுதிகள் வழியாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் தலைமையிலான அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

முன்னதாக 2022 பிப்ரவரி மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடற்படையோடு இணைந்து ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 529 கிலோ ஆசிஸ், 221 கிலோ மெத்தபெட்டமைன், 13 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும இந்திய கடற்படையும் இணைந்து தொடர்ச்சியாக நடத்திய அதிரடி சோதனையில் தான் இது போன்ற ரூ.25000 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com