மெட்ரோ
மெட்ரோ

ரயில் நிலையங்களுக்கு கீழே ரயில் நிலையம்.. மெட்ரோ நிர்வாகத்திற்கு பெரிய சவால்!

Published on

மெட்ரோ எல்லாம் நமக்கு தேவையா என கேட்ட காலம் கடந்து மெட்ரோ ரயில் அனைத்து இடங்களுக்கும் வேண்டும் என்று சொல்லகூடிய காலத்திற்கு வந்துவிட்டோம். தினசரி மக்கள் தொகை பெற போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இது போன்ற அதிவிரைவு ரயிலான மெட்ரோ ரயிலை நாடுகின்றனர்.

இதுவரை இல்லாத சவாலாக 112 அடி ஆழத்தில் கீழடுக்கு மெட்ரோ நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களுக்கு அடியில் இந்த மெட்ரோ நிலையம் அமைக்கப்படவுள்ளதால் மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்து பணியை செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து பேசிய மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி, பூமிக்கு கீழ் 112 அடி ஆழத்தில் பிரம்மாண்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைத்து அதில் மெட்ரோ ரயில்களை இயக்க உள்ளோம். தற்போது செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பது போல் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் கீழ் பகுதியில் 150 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணியை துவங்கியுள்ளோம்.

இந்த நிலையத்தில் 3 மின் தூக்கிகளும், 24 எஸ்கலேட்டகளும் அமைக்கப்படும். பயணியருக்கான உரிய பாதுகாப்பு, வெளிச்சம், காற்றோட்ட வசதி, அடிப்படை வசிதகளுடன் அமைக்கப்படும். ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் கட்டுமான பணியை துவங்கவுள்ளோம். ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கீழே மற்றொரு ரயில் நிலையம் அமைப்பது என்பது சவாலான பணி. எனவே ஒவ்வொரு முறையும் முழு சோதனை நடத்திய பிறகே பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com