மெட்ரோ ரயில்களில் வாட்ஸப் மூலம் டிக்கெட் எடுக்கலாம்!

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்
Published on

மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை  விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது மெட்ரோ இரயில் நிறுவனம்.

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ இரயில்களில்  பயணிக்க  நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும்  முறை , பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை  என  மூன்று முறைகள் உள்ளன.

இந்நிலையில்  வாட்ஸ்-அப்  மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப் பட்டதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் `ஹாய்’ குறுந்தகவல் அனுப்பினால், டிக்கெட் எடுப்பது தொடர்பாக  தகவல்கள் வரும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம்,சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ்-அப் மூலமோ, ஜிபே, யு-பே மூலமோ பணம் செலுத்தினால், உங்களின்  வாட்ஸ்-அப் எண்ணுக்கு டிக்கெட் வந்துவிடும்.

இதை ரயில் நிலைய நுழைவாயில் உள்ள க்யூஆர்குறியீடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும்

-என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com