மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற உள்ளதால், கிரீன்வேஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிரீன்வேஸ் சாலை மற்றும் டி.ஜி.எஸ்., தினகரன் சாலை சந்திப்புகளில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று முதல் வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே., மட சாலை - மந்தவெளி சந்திப்பில் இருந்து, பிராடிஸ் கேஸில் சாலை வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மந்தவெளியில் இருந்து வரும் வாகனங்கள் ஆர். கே சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால் பிராடிஸ் சாலையிலிருந்து ஆர்.கே மட் சாலை நோக்கி செல்லலாம்.
அடையாறிலிருந்து கிரீன் வேஸ் சாலை சந்திப்பில் வலபுறமாக திருப்பி விடப்பட்டு டி.ஜி. எஸ் தினகரன் சாலை வழியாக செல்லும்.
மைலாப்பூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், மந்தவெளி சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி, சவுத் கெனால் பேங்க் சாலை வழியாக டென்று டி.ஜி. எஸ்., தினகரன் சாலைக்கு செல்லலாம்.