41 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத சரிவை கண்ட மேட்டூர் அணை!

41 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத சரிவை கண்ட மேட்டூர் அணை!

மிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்ட பசனங்களுக்கு முதன்மை ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத அளவிற்கு அணையின் நீர்மட்டம் சரிவை கண்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களுடைய முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டினுடைய டெல்டா மாவட்டங்களின் மிக முக்கிய நீர் தேவையை காவிரியே பூர்த்தி செய்கிறது. காவிரி நீரை கொண்டு டெல்டா மாவட்டங்களில் மட்டும் லட்சக்கணக்கான பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

காவிரிக்கு வரும் நீரை தேங்கி வைத்து விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும், நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 120 அடி ஆழத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணை தமிழ்நாட்டுடைய முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் பல்வேறு பயன்பாட்டிற்காக அவ்வப்போது திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக நீரை திறந்து வைத்தார்‌. ஆனால் கர்நாடக அரசு போதிய அளவு நீரை தமிழகத்திற்கு தராததால் நீர்வரத்து குறைய தொடங்கியதை அடுத்து மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தது.

மேலும் கர்நாடக அரசு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டிற்கு 125 டிஎம்சி தண்ணீரை தர வேண்டிய நிலையில் நடப்பாண்டில் 46 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியது. அதில் மேட்டூர் அணைக்கு 31 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்தடைந்தது. இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில் கர்நாடகா தற்போது முற்றிலுமாக நீர் திறப்பை நிறுத்தி இருப்பதால் வரக்கூடிய சம்பா மற்றும் தாளடி பயிர்களை பயிரிட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் தற்போது 93.4 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டிய நிலையில் வெறும் 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் இன்று வெரும் 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதுவும் முற்றிலுமாக நிறுத்தப்படும். கடந்த 41 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர் இருப்பு மிகப்பெரிய சரிவை கண்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளனர்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கர்நாடகாவில் குறைந்த அளவில் மழை பெய்திருப்பதை காரணம் காட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழ்நாடு அரசும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் பயனளிக்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com