2026ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி வரும் – தவெக செய்தி தொடர்பாளர்!

Vijay with MGR
Vijay with MGR
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் மீண்டும் 2026ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி வரும் என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியதைப் பார்ப்போம்.

சமீபத்தில்தான் தவெக கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். விஜய் ஆவேசமாகவும் கலகலப்பாகவும் பேசினார். பலரும் இதற்கு விமர்சனங்கள் செய்தனர். இதுவரை அதிமுக தவிர மற்ற கட்சிகள் விஜயை எதிர்க்கும் விதமாகத்தான் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லாத நிலையில், திடீரென்று கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

அப்போது விஜய் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டாமென்றும், சிலவற்றிற்கு மட்டும் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் தமிழக முதல்வர்  ஸ்டாலின் நேற்று நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். அதாவது இன்று புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறி இருந்தார்.

இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார்.  அதாவது, “முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவர் விஜயை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் அளிப்பது சரியானது கிடையாது.

இதையும் படியுங்கள்:
மாணவர் மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் ‘முதல்வர் படைப்பக’ மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்!
Vijay with MGR

தமிழ்நாட்டில் தங்களுடைய குடும்ப ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எதிரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது திமுகவின் டிஎன்ஏவில் இருக்கிறது. கடந்த 1970 ஆம் ஆண்டு குடும்ப ஆட்சிக்கு எதிராகத்தான் எம்ஜிஆர் கலகம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். இதே வரலாறு வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திரும்பும். மேலும் வருகிற 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் குடும்ப ஆட்சியை தகர்த்தெறிந்து விட்டு விஜய் ஜனநாயக ஆட்சியை அமைப்பார்.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com