சந்திரயான் 3 வெற்றி.. பாடத் திட்டத்தில் இடம்பெறும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
Published on

சந்திரயான் 3 வெற்றி வரும் கல்வியாண்டு பாடத்திட்டட்தில் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

35 நாட்களாக புவி வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுப்பாதைகளை நிறைவு செய்த விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக சந்திரயான் 3 தரையிரக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளை எல்லாம் அவ்வபோது இஸ்ரோ படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறது. எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது. வழிசெலுத்தல் கேமராவில் (நேவிகேஷன் கேமரா) லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது.

இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது. அத்துடன் உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com