

தமிழக அரசின் சட்டம் மற்றும் நீர்வளத் துறை அமைச்சராகவும், திமுக பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். 87 வயதாகும் அவருக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதியாகி. சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.