இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் பேசியபோது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அந்த நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதை நிறுத்துவதால் ஏதேனும் சட்ட சிக்கல் வருமா? என ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அரசு முட்டை, சிறுதானிய உணவு வழங்க அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும். ஏற்கனவே காலையில் பால் வழங்கி வருகிறோம்.
அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு க்கு செல்லும் மாணவர்க ளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். சி.பி.எஸ்.இ. பாடத்துக்கு மாறினாலும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. மாணவர்களுக்கு கலை, அறிவியல் பாடங்களுக்கு கவுன்சிலிங் விரைவில் தொடங்கும்.
போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் வாங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. புகாருக்குள்ளான மாகி போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர். தொடர்ந்து விசாரணைக்கு நடைபெறுகிறது. விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்
ஆசிரியர் புதிய இடமாற்றல் கொள்கை குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஒரு சில மாற்றங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து இடமாற்றல் கொள்கை முடிவு செய்யப்படும். பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.