அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அலுவலகத்திற்கு சீல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அலுவலகத்திற்கு சீல்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் நடத்தி வரும் நிறுவன அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அவரது சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

நேற்று காலை 8 மணி முதல் கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

தங்களது அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்க கூடாது என்றும் சென்னையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com