வாக்களிப்பதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் சிறை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!

mobile phone
mobile phonesource:Aajtak
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுவெளியில் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும், வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை அமலில் உள்ளது என்றும் பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கை பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுவெளியில் தெரிவிப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 

வாக்களிக்கும் வீடியோவை வெளியிடும் சமூக வலைதள பக்கம் உடனடியாக முடக்கப்படும் என்றும், வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டால் 6 மாதம் முதல் 2  வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாக்களிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தேர்தல் ஆணையம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com