Artemis ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோடி. ISRO-வுக்கு என்ன பயன்?

Artemis ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோடி. ISRO-வுக்கு என்ன பயன்?
Published on

ந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிப் பணி களையும், அவர்களின் ஆகச் சிறந்த சாதனைகளையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல உதவும் Artemis ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்காவுடன் Artemis ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தமானது, 1967 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தத்தின் அடிப்படையிலானதாகும். இந்த ஒப்பந்தம் Artemis திட்டத்தின் ஒரு பகுதி என்றே சொல்லப்படுகிறது. 

Artemis திட்டம் என்றால் என்ன? 

தாவது, 2025 ஆம் ஆண்டுக்குள், மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி, அங்கிருந்து செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும், அமெரிக்காவின் மிகப்பெரிய கனவுத் திட்டம்தான் ஆர்டெமிஸ். 2023 ஜூன் மாத நிலவரப்படி, இந்த ஒப்பந்தத்தில் இதுவரை 26 நாடுகள் கையெழுத் திட்டுள்ளன. ஐரோப்பாவில் 10 நாடுகள், ஆசியாவில் 10 நாடுகள், வட அமெரிக்காவில் 3 நாடுகள், ஓசியானியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து தலா 2 நாடுகள் இத்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லா நாடுகளுமே, அமைதியான முறையில் விண்வெளி ஆய்வு, விண்வெளி ஆய்வுகளில் வெளிப்படையாக இருப்பது, விண்வெளியில் உள்ள வளங்களை சரியாகப் பயன்படுத்துவது போன்ற கொள்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். 

Artemis ஒப்பந்தத்தால் ISRO-வுக்கு என்ன பயன்?

Artemis ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதால், குளோபல் ஸ்பேர்ஸ் கார்ப்பரேஷனின் அர்ப் பணிப்பையும், சந்திர கிரகணம் தொடர்பான ஆய்வுகளில் இந்தியா ஆர்வம் காட்டுவதையும் வெளிப்படுத்துகிறது. இதனால் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தோடு மட்டுமில்லாமல், ஒப்பந்தத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுடனும் இணைந்து, நிலவுக்கான எதிர்கால விண்வெளி பயணம் தொடர்பான அறிவையும், நிபுணத்துவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் அறிவியல் ஆராய்ச்சி, விண்வெளியில் மனித குலத்தின் இருப்பை விரிவு படுத்தல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் எளிதாகப் பங்கேற்க முடியும்.

Artemis ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டதைத் தவிர, அவரின் அமெரிக்க பயணத்தின் விளைவாக, இஸ்ரோவும் நாசாவும் ஒன்றாக இணைந்து, 2024 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான கூட்டுப் பணிக்கும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ISRO விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில், அடுத்த நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com