உக்ரைன் செல்லும் மோடி… ரஷ்யா உக்ரைன் இடையே பாலமாக செயல்படும் இந்தியா?

Narendra Modi
Narendra Modi
Published on

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தியா அந்த நாடுகளுக்கு எந்த வித உதவியும் செய்யாது என்றும், ஆனால், இருநாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஒருபக்கம், மற்றொருபக்கம் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பலகாலமாக போர் நடந்துவருகிறது. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது.

மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகிறது.

கடந்த ஜூன் மாதம், மூன்றாவது முறையாக பதவியேற்ற இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் அதிபரை சந்தித்து, பேச்சுவார்த்தையே அமைதிக்கான ஒரே தீர்வு என்று கூறியிருக்கிறார்.

மேலும் தற்போது, இந்த போரில் இந்தியா நேரடியாக தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தது. அதேபோல், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் தகவல் பரிமாற்றத்திற்கு பாலமாக செயல்பட இந்தியா உதவியாக இருக்கும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் மூத்த அதிகாரி சென்ற மாதம் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது விளாடிமிரின் மூத்த அதிகாரி உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மோடி மிகப்பெரிய பங்கு வகிக்கலாம் என்று தெரிவித்தார். ஆனால், இந்தியா இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்:
தாய்லாந்தின் பிரதமரான கோடீஸ்வரி!
Narendra Modi

ஆனால், இந்தியா தெளிவாக சொல்லிவிட்டது. அதாவது, இருநாடுகளுக்கும் இந்தியா எந்தவொரு உதவியும் செய்யாது, பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது. ஆனால், கண்டிப்பாக ஒருநாடு சொல்லும் தகவலை மற்றொரு நாட்டுக்கும் சொல்லும் ஒரு பாலமாக விளங்கும் என்று தெளிவாக சொல்லிவிட்டது.
இந்தநிலையில், இன்னும் சில நாட்களில் இந்திய பிரதமர் மோடி, உக்ரைன் தலைநகர் கீவ் செல்கிறார். ஒருவேளை ரஷ்யா மற்றும் உக்ரைன் சமரசமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகிறதோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com