bjp mayor meeting
செய்திகள்
தேர்தல் வெற்றி நோக்கத்தில் மட்டும் செயல்பட வேண்டாம் : மேயர்களுக்கு மோடி அறிவுரை!
குஜராத்தில் நேற்று அனைத்து பாஜக மேயர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி " வெறும் தேர்தலில் என்ற நோக்குடன் மட்டும் செயல்படவேண்டாம். நகரங்களின் உண்மையான வளர்ச்சியினை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் " என அறிவுரை வழங்கினார் பிரதமர் மோடி.
prime minister narendra modi
இதில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 118 மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் பங்கேற்றனர்.
மேலும் மேயர்கள் தங்களுக்குள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிக்கொள்ளவும் ,கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் வாட்சாப் செயலிகளில் தனி சமூக வலைதள குழுக்களை உருவாக்கி கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

