பணமதிப்பிழப்புக்குப் பின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதா?

பணப்புழக்கம்
பணப்புழக்கம்
Published on

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் பணப் புழக்கத்தை தடுப்பதற்காக கொண்டுவரப் படவில்லை. உண்மையில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் அதாவது 2015-16 இல் புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் எண்ணிக்கை 9.02 லட்சம். இதன் மதிப்பு ரூ.16.41 லட்சம் கோடி. கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் நோட்டுகளின் புழக்கம் 12.43 லட்சம்  (இதன் மதிப்பு ரூ.28.26 லட்சம் கோடி) என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது, 13.05 லட்சமாக (இதன் மதிப்பு 31.06 லட்சம் கோடி) உள்ளது. எனவே, உண்மையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்த தகவலை மத்திய அரசு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் பணப் புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தின் தேவை அதிகரித்தல், பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பழைய நோட்டுகளை புதுப்பித்தல், கையிருப்பு தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டே ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவே பண மதிப்பீட்டு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது தவறானது.

பெருமளவில் புழக்கத்தில் இருந்த கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பது, அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சிலர் கணக்கில் வராத பணமாக பதுக்கிவைப்பதை கட்டுப்படுத்துவது, பயங்கரவாதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை தடுப்பது ஆகிய மூன்று காரணங்களுக்காகவே பண மதிப்பிழப்பு  நடவடிக்கையை அரசு எடுத்தது என்று அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

(கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவில் ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும், தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படும் பணம் முடக்கப்படும் என்று பிரமதர் மோடி கூறியிருந்தார்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com