உலகம் முழுவதும் குரங்கம்மை வேகமாக பரவி வருகிறது – WHO எச்சரிக்கை!

Monkey Pox
Monkey Pox
Published on

உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கோ நாட்டிலிருந்து சுமார் 10 நாடுகளுக்கு குறுகிய காலத்திலேயே குரங்கம்மை நோய் பரவியுள்ளது. இதுவரை மெல்ல மெல்ல சுமார் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் இந்த வைரஸ் வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த குரங்கம்மை நோயினால் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, உயிர்சேதமும் நிகழும் என்பதால், அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், குரங்கம்மை நோயினால், இந்த ஆண்டு மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 160% இந்த நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில், கேரளாவில் மூவருக்கு குரங்கு அம்மை சமீபத்தில் உறுதியானது. இதற்கிடையே, மேற்கு டில்லியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது.

குரங்கம்மை நோய் ஒரு நபருக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு வரை தீவிரமாக இருக்கும். குறிப்பாக, சுகாதாரமின்றி இருப்பவர்களுக்கும், அந்த இடங்களில் வசிப்பவர்களுக்கும் எளிதாக இந்தத் தொற்று ஏற்படும். காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள், தலைவலி, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
திமுக அரசின் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Monkey Pox

ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், 'இமான்வேக்ஸ்' தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.

கொரோனாவை போல் இது அதிகளவு பரவி உயிர்சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இதனை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com