
மத்திய அரசு இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசியுடன்(LIC) இணைந்து பீமா சகி யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் மாதந்தோறும் ரூ. 7000 தொகையினை பெறலாம். இந்தத் திட்டம் குறிப்பாக வேலை செய்ய விருப்பம் இருந்தாலும், அதற்கான வழிமுறைகளோ வாய்ப்புகளோ இல்லாத பெண்களுக்கான மிகச் சிறந்த திட்டம்.
எல்ஐசி பீமா சகி திட்டத்தின் முக்கிய நோக்கம், காப்பீட்டுத் துறையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகும். இதன் கீழ், பயிற்சி பெற்ற பெண்கள் LIC என்னும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் முகவர்களாக பணியாற்றலாம். இந்தத் திட்டம் வேலைவாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல், பெண்களுக்கு நிதி கல்வியறிவையும் வழங்குகிறது. மாத மாதம் இந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ரூ. 7,000 வழங்கப்படும். பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி முதல் மூன்று ஆண்டுகள் பெறலாம். இந்த பயிற்சிக்கு பின் எல்ஐசி முகவர்களாக பெண்கள் பணியாற்றலாம்.
பெண் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும், அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும், மேலும் ஆதார், பான் கார்டு மற்றும் குடியிருப்புச் சான்று போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
இத்திட்டம். முதல் ஆண்டில் ரூ. 7,000 உதவித் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும். இந்த தொகை ரூ. 6,000 ஆக இரண்டாவது ஆண்டில் குறைக்கப்படும்.மூன்றம் ஆண்டில் மாதம் ரூ.5000 வழங்கப்படுகிறது. அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கமிஷன்களும் கிடைக்கும்.
பயிற்சி காலம் முடிந்ததும், பீமா சகிகள் எல்.ஐ.சி காப்பீட்டு முகவர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
எல்ஐசி பீமா சகி திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் முறை
எல்ஐசி பீமா சகி திட்டத்தில் சேர விரும்பும் பெண்கள் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
1. முதலில் எல்ஐசியின் வலைத்தளத்திற்குச் செல்லவும்.
2. அங்குள்ள "Apply for Bima Sakhi Yojana" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. ஒரு புதிய படிவம் திறக்கும், அதில் மாநிலம் மற்றும் மாவட்டம் உள்ளிட்ட பிற தேவையான தகவல்கள் நிரப்பப்பட வேண்டும்.
4. தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி படிவத்தை சமர்ப்பிக்கவும்.
5. படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, மொபைலில் உறுதிப்படுத்தல் செய்தி வரும்.
இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த ஆவணங்கள் தேவைப்படும்:
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- வயதுச் சான்று: பிறப்புச் சான்றிதழ் அல்லது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
- முகவரிச் சான்று: ஆதார், வாக்காளர் ஐடி அல்லது மின்சார கட்டண ரசீது
- கல்வி: 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
திட்டத்தில் சேர நினைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அளிக்கும் தகவல்கள் முழுமையற்றதாக இருந்தாலோ அல்லது ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பித்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.