"அணைக்கட்டுகளில் தேக்கப்படும் தண்ணீர் மூலமாக அதிக மின்சார சக்தி" ஐ.ஐ.டி மாணவர்களின் புவி வெப்பமயமாதல் ஆய்வு சொல்லும் செய்தி!

"அணைக்கட்டுகளில் தேக்கப்படும் தண்ணீர் மூலமாக அதிக மின்சார சக்தி" ஐ.ஐ.டி மாணவர்களின் புவி வெப்பமயமாதல் ஆய்வு சொல்லும் செய்தி!

இந்தியா முழுவதும் உள்ள 46 பெரிய அணைக்கட்டுகளை புவி வெப்பமயமாதல் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

காந்தி நகர் ஐஐடியைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவின் அணைக்கட்டு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து முடிவுகளை அறிவித்திருக்கிறார்கள். இந்தியாவின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் உள்ள முக்கியமான அணைக்கட்டுகளில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஆய்வின் மூலம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் 5 டிகிரி வெப்பம் கூடுதலாக உயர்ந்திருப்பதாகவும், மத்திய, தெற்கு பகுதிகளில் குறைந்தபட்சம் 3 டிகிரி வெப்பம் உயர்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய இந்தியாவில் உள்ள அணைக்கட்டுகளில் வட இந்தியா, தென்னிந்தியாவை விட அதிகளவு தண்ணீர் வரத்து இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

நர்மதா, கோதாவரி, மகாநதி போன்ற ஆறுகளின் முகத்துவாரங்களில் தண்ணீர் வரத்து அதிகமாகி புதிய அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மின்சார சக்தியை பெற முடியும் என்கிறார்கள். ஆகவே, புவி வெப்பமயமாதலினால் நாட்டின் பிற பகுதிகள் பாதிக்கப்பட்டாலும் அணைக்கட்டுகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி அதன் மூலம் பல்வேறு பலன்களை கிடைக்க வாய்ப்பு உண்டு.

ஆற்றில் நீர் அதிகமானால் அணைக்கட்டுகளில் நீர் தேக்கப்படுவது அதிகரிக்கக்கூடும். அதன் மூலம் கூடுதலாக மின்சாரம் தயாரிக்க முடியும். இவையெல்லாம் நல்ல விஷயங்கள். சில சவாலான விஷயங்களும் காத்திருக்கின்றன. பூகம்பம், பேரழிவு போன்ற காரணங்களால் அணைக்கட்டுகள் உடைந்து போவதற்கும் வாய்ப்புண்டு என்கிறார்கள்.

அதே நேரத்தில் அதிக தண்ணீர் வரத்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இந்தியா எப்போதும் பின்தங்கி இருப்பது உண்மை. அதை தவிர்ப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com