சூரைக்காற்றினால் நெல்லை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்!

சூரைக்காற்றினால் நெல்லை மாவட்டத்தில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்!

நெல்லை மாவட்டத்தில் களக்காடு பகுதியில் திடீரென சூறைக் காற்றுடன் கொட்டிய மழையினால் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமானது. சுரைக்காற்றினால் நாசமாகிய வாழை மரங்களை கணக்கெடுப்பு நடத்தி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காடு, கருவேலங்குளம், மஞ்சுவிளை, காமராஜ்நகர்,

பத்மநேரி, மேலப்பத்தை, கீழப்பத்தை, பெருமாள்குளம், கல்லடி சிதம்பரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமானது.

நெல்லை மாவட்டம், களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி அனல் காற்று வீசும் நிலையில் திடீர் எனஇடி மின்னலுடன் கோடை மழை கொட்டியது. அப்போது பலத்த சூறை காற்றும் வீசியது.

குலை தள்ளி, அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த ஏத்தன் ரக வாழைகள் ஆகும், இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இந்தாண்டு வாழைத்தார்கள் விலை குறைவாகவே உள்ளது, 1 கிலோ வாழைத்தார்கள் ரூ 30க்கு விற்பனையானது. தற்போது வாழைகள் சாய்ந்துள்ளதால் வாழைத்தார்களின் விலை மேலும் சரியும் நிலை உருவாகியுள்ளது.

எனவே ஒட்டு மொத்த விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர். இப்பகுதியில் கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் காற்றினால் வாழைகள் சாய்ந்ததால் கடன்களை அடைக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். காற்றினால் நாசமான வாழைகளுக்குக் கணக்கெடுப்பு நடத்தி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல காற்றினால் பனை, தென்னை, வேம்பு மரங்களும் சாய்ந்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com