பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப் பட்டது. இந்த சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப் படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது..

நேற்று அரபா தினம் என்பதால் உலகில் உள்ள ஹாஜிகள் அனைவரும் மெக்கா சென்று அங்கு ஹஜ் கடமையை நிறைவு செய்ததை ஒட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடையில் உள்ள மஸ்ஜித் அஸ்ரப் பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்தினர். இதே போல் பிற மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் மக்கள் கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் ஆரத் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் ஹஜ் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் இறைவனின் பெயரால் குர்பானி எனப்படும் ஆடுகளை பலியிட்டு அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்கி மகிழ்த்தனர்.

ஈதுல் ஆளுஹா தொழுகைக்கு பின்னர் நபிகள் நாயகத்தின் முன்னோரில் சிறப்பு வாய்ந்த நபி இப்ராஹிமின் (அலை) தியாகத்தை நினைவு கூறும் வகையில் குர்பானிக் கடமைகள் நிறைவேற்றப்பட்டன. தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையில், இறைவனுக்கு மனிதன் எதையும் தியாகம் செய்யும் தன்மை ஏற்படுகிறது. அதற்காகத் தான் இத்தியாக திருநாளும் கொண்டாடப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com