வரலாற்றில் முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு..!

Mosquito
Mosquito
Published on

வரலாற்றில் முதல் முறையாக, ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டது. இதன் மூலம் உலகில் கொசுக்களே இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்து விட்டது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகருக்கு வடக்கே உள்ள ஒரு சிறிய நகரத்தில் அக்டோபர் மாதத்தில், காட்டு கொசுக்கள் இருப்பதை கண்டனர். இந்த கொசுக்கள் குளிரினை தாங்கும் கேரியர் குலிசெட்டா அன்யூலாட்டா என்ற ஐரோப்பிய இனமாகும்.இந்த கேரியர் குலிசெட்டா கொசுக்கள் குளிர் பிரதேசத்தில் வாழும் தகவமைப்பை கொண்டதாகும்.

பொதுவாக இந்த கொசு குளிர் மிகுந்த ஐரோப்பிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இது வெப்பமண்டல கொசுக்களைப் போலல்லாமல் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே வசிக்க முடியும். கடும் குளிரினை இது பொறுத்துக் கொள்ளும் என்று அறியப்படுகிறது. மூன்று கொசுக்களைக் கண்டுபிடித்ததால் ஐஸ்லாந்தில் கொசுக்கள் பெருக தொடங்கி விட்டன என்பதை அர்த்தமாக கொள்ள முடியாது. ஆனால், இது சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எச்சரித்து உள்ளது. பனிமயமான ஐஸ்லாந்து நாட்டில் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதாக தான் இது காட்டுகிறது. எதிர்கால காலநிலைகள் மோசமான கட்டத்தை அடையப் போவதை எச்சரிக்கை மூலம் உணர்த்துகிறது.

கொசுக்கள் எப்படி நாட்டிற்குள் வந்திருக்கும் என்று கேள்விகள் நிறைய எழுகின்றன. கப்பல்கள் , விமானங்கள் போன்ற போக்குவரத்தின் மூலமாக கொசுக்களின் முட்டைகள் யாரும் அறியாமல் கூட , ஏதோ வகையில் தன்னிச்சையாக கடத்தப்பட்டு வந்திருக்கலாம். இறக்குமதி செய்யப்படும் ஏதேனும் பொருட்கள் மீது ஒட்டிக் கொண்டு அவை உள்ளே வந்திருக்கலாம்.இது இப்போது தான் முதன் முறையாக உள்ளே நுழைந்து இருக்கும் என்று கணிக்க முடியாது.

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் கொசுக்களின் முட்டைகள் போக்குவரத்தில் இருந்து இருக்கும். ஆனால் , ஐஸ்லாந்தின் காலநிலை அவற்றை உயிருடன் இருக்கவோ , வளர்ச்சி அடையவோ விடுவதில்லை. தற்செயலான இந்த சம்பவத்தில் கொசுக்கள் உயிர் வாழ தற்போதைய காலநிலை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.இது இலையுதிர் காலமாக இருப்பதால் சில உயிர்கள் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கொசுக்கள் ஐஸ்லாந்தில் நிலைப் பெற்று அவற்றின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தால், அது மோசமான ஒரு அபாயத்தை விளைவிக்கும். ஐஸ்லாந்து மக்கள் இதற்கு முன்னர் கொசு கடிக்கும் கொசுவினால் பரவும் நோய்களுக்கும் ஆளானது இல்லை. இயற்கையாகவே அவர்களுக்கு கொசுவுடன் சேர்ந்து வாழும் நோய் எதிர்ப்பு தகவமைப்புகளை பெற்றிருப்பதில்லை, இதனால் இவர்களுக்கு கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

கொசு லார்வாக்கள் குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களையும் ஆக்கிரமித்து, அங்கு அவை உணவு வலைகளை மாற்றக்கூடும்.

ஐஸ்லாந்தில் பல ஆழமற்ற குளங்கள் மற்றும் ஈரநிலங்கள் உள்ளன, அவை வெப்பமான சூழ்நிலைகளில் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடங்களாக மாறி விடலாம். மலேரியா, டெங்கு ஆகிய நோய்களை ஐரோப்பிய கொசுவான கேரியர் குலிசெட்டா அன்லுலாட்டா பரப்புவதில்லை ஆயினும் மற்ற நோய் கிருமிகளை பரப்பாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதம் இல்லை. மேலும் இது ஐஸ்லாந்து வெப்பமடைவதை எச்சரிக்கிறது. கொசு என்பது இங்கு ஒரு பிரச்சனையாக மட்டுமல்ல , பல பிரச்சனைகளின் தொடக்கமாக உள்ளது.இது இங்கு மற்ற சிறிய பூச்சிகள் பரவ உள்ளதற்கான ஒரு அறிகுறியாகும்.

இதையும் படியுங்கள்:
குவியும் பாராட்டுக்கள்..! வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா..!
Mosquito

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com