இந்திய கிராமங்களில் அதிகம் உருவாகும் பணக்காரர்கள்.

இந்திய கிராமங்களில் அதிகம் உருவாகும் பணக்காரர்கள்.

ந்தியாவில் பணக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக கிராமத்தில் வசிப்பவர்களே பணக்காரர்களாக மாறுவார்கள் என்றும் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் சமீபத்தில் சூப்பர் ரிச் குடும்பங்கள் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. எந்த குடும்பமெல்லாம் ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் பெறுகிறதோ, அவர்கள் சூப்பர் ரிச் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். 2021 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி, இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் சூப்பர் பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சூப்பர் பணக்காரர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 

People Research என்ற அமைப்பு நடத்திய ஆய்வுகளின் முடிவில், வரும் 2030ல் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இத்தகைய பணக்காரக் குடும்பங்களின் வளர்ச்சி நகர் புறத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களிலேயே அதிகமாக இருக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. கிராமப்புறங்களில் பணக்காரர்களின் வளர்ச்சி விகிதம் 14.2% ஆகவும், இதுவே நகர்புறத்தில் 10.6% சதவீதமாகவும் மட்டுமே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்கள் தற்போது விரைவாக வளர்ந்து வருவதால், 2030 ஆம் ஆண்டில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான பணக்காரர்கள் இந்தியாவில் இருப்பார்கள் எனப்படுகிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் விவசாயத்துடன் இணைந்து விவசாயம் சாரா தொழில்களிலும் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். தொழில் முனைவோர் அனைவரும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்துவதால், அங்கே வேலைவாய்ப்பு ஏற்பட்டு பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. 

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதால், வெளிநாட்டு வங்கிகளும் இந்தியாவில் தங்களின் சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2018 முதல் 2022 வரையில் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் புதிதாக 70 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

மேலும் லோயர் மிடில் கிளாஸ் நிலையில் இருந்த மக்கள் தற்போது மிடில் கிளாஸ் நிலைக்கு அதிகம் உயர்வதால், கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதை நாட்டின் வளர்ச்சியாக நாம் பார்த்தாலும், இந்தியாவில் போதிய சமத்துவமின்மையையும் இது எடுத்துரைக்கிறது. இந்தியாவில் மொத்தம் 43 கோடி மிடில் கிளாஸ் மக்கள் இருக்கின்றனர். இவர்களுடைய ஆண்டு வருமானம் 4 முதல் 30 லட்சம் வரை இருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை 2030ல் 70 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே இந்தியா தற்போது வேகமாக மிடில் கிளாஸ் மக்களை அதிகம் கொண்ட சமூகமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக, கிராமபுரத்தைச் சேர்ந்தவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com