
போலந்து நாட்டில் தன் மகனின் முன்னாள் காதலியுடன் MMA போட்டியில் கலந்து கொண்ட தாய், மிகக் கடுமையாக சண்டையிட்டார்.
நமது ஊரில் மாமியார் மருமகள் சண்டை நிறைய நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் போலந்து நாட்டில் சற்று வித்தியாசமாக மகனின் முன்னாள் காதலிக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்துள்ளது. பெரும்பாலான மேலை நாடுகளில் MMA என அழைக்கப்படும் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த போட்டியில் இரு வீரர்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். அடிப்பதில் எவ்விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. எதிராளிகள் சரிந்தால் முகத்திலேயே மாங்கு மாங்கு என ஓங்கி குத்துவார்கள். இதன் விதிகள் அந்த அளவுக்கு பயங்கரமானது. இந்த போட்டிகள் பெரும்பாலும் ஒரே வயது அல்லது ஒரே எடையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் சமீபத்தில் ஒரு 19 வயது இளம் பெண்ணுக்கும், 50 வயது பெண்ணுக்கும் இடையே வித்தியாசமான முறையில் MMA குத்துச்சண்டை நடந்தது. இதில் சுவாரசியம் என்னவென்றால், நிகிதா என்ற 19 வயது பெண், அவருக்கு எதிராக போட்டியில் கலந்து கொண்ட 50 வயதான கோசியா என்ற பெண்ணின் மகனுடைய முன்னாள் காதலி ஆவார்.
தனது மகனை காதலித்து ஏமாற்றியதால் நிகிதா மீது தீராத பாகையில் இருந்த கோசியா, அவரை MMA போட்டியில் தன்னுடன் மோதுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு நிகிதா ஒப்புக்கொண்டதால், இந்த புதுமையான சண்டையை நடத்த MMA நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்த குத்துச்சண்டையில் 19 வயதான நிகிதா வெற்றி பெறுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், போட்டியின் ஆரம்பம் முதலே மிகக் கடுமையாக சண்டை போட்ட 50 வயதான கோசியா, அபார வெற்றி பெற்றார்.
இவர்கள் இருவரும் சண்டை போடும் காணொளி வலைதளங்களில் தற்போது அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.