குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற தாய். அடுத்து என்ன நடந்தது?

குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற தாய். அடுத்து என்ன நடந்தது?

றுமை காரணமாக குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற தாய். 24 மணி நேரத்தில் தாயை கண்டுபிடித்து குழந்தையை ஒப்படைத்து ரயில்வே போலீசார். 

ஓடி ஓடி உழைத்தும் வேலை மூன்று வேலை உணவில்லை என்பதே தற்போதைய காலகட்டத்தில் நிதர்சனம். பொறுமை ஆட்டிப் படைத்ததால், பிறந்த குழந்தையைக் கூட வளர்க்க முடியாமல், அதனை ரயில் நிலையத்தில் தாயே விட்டுச் சென்றுள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரி. இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைமேடை எண் ஒன்றில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது ரயில் நிலையத்தின் நடைமேடையில் கையில் குழந்தையுடன் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த பெண் ஒருவர் குழந்தையை ஐந்து நிமிடம் பார்த்துக் கொள்ளுங்கள் நான் கழிவறைக்கு சென்று விட்டு வருகிறேன் எனக் கூறி சுந்தரியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். 

ஆனால் அந்தப் பெண்மணி சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் செய்வதறியாது தவித்த சுந்தரி குழந்தையை ரயில்வே போலீசாரிடம் சென்று ஒப்படைத்து நடந்ததை விளக்கமாக கூறியுள்ளார். உடனடியாக போலீசார் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியடைந்தனர். மூன்று மாத பெண் குழந்தையை சுந்தரியிடம் ஒப்படைத்து விட்டு வெளியே காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் அந்த பெண்மணி ஆட்டோவில் ஏறிச் சென்றதை போலீசார் கண்டறிந்தனர். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

வாட்ஸ் அப் மூலமாக குழந்தை மற்றும் தாயின் புகைப்படத்தை பதிவிட்டு ரயில்வே பாதுகாப்பு போலீசார் தேட ஆரம்பித்தனர். தொடர் முயற்சியால் ராணுவ அதிகாரி ஒருவர் மூலமாக வேலூர் மோதக்கல் கிராமத்திலிருக்கும் குழந்தையின் தாயை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பெண்மணியிடம் விசாரணை செய்ததில் அவரது பெயர் கலைச்செல்வி என்பதும், இந்த குழந்தை அவருக்கு பிறந்த நான்காவது பெண் குழந்தை என்பதும் தெரியவந்தது. கணவர் விஜய் திருப்பூரில் 7000 ரூபாய் மாத வருமானம் மட்டுமே பெற்று வந்ததால், விலைவாசி உயர்வு காரணமாக வறுமை அந்த குடும்பத்தை வாட்டி வதைத்து வந்ததும் தெரியவந்தது. 

வளர்க்க முடியாது என்பதால் ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.  குடும்பத்தின் நிலைமையை அறிந்த போலீசார் பெற்றோரை எச்சரித்ததுடன், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் மூலமாக கலைச்செல்வியின் குழந்தைகள் வளர்வதற்கு வேண்டிய உதவியை செய்வதற்கும் ஏற்பாடு செய்தனர். 

இதில் சுவாரஸ்ய சம்பவமாக, பெயர் வைக்கப்படாத அந்த மூன்று மாத குழந்தைக்கு 'தமிழ் மகள்' என எஸ்.பி பொன்ராம் பெயர் சூட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com