ம.பி. முதல்வரை குறிவைத்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் காங்கிரசுக்கு சிக்கல்.

ம.பி. முதல்வரை குறிவைத்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் காங்கிரசுக்கு சிக்கல்.

த்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை குறிவைத்து நிதி நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னத்தை போலவே காங்கிரஸ் கட்சியால் ஓட்டப்பட்டதாக கூறப்படும் சுவரொட்டியால் சிக்கல் எழுந்துள்ளது.

அந்த சுவரொட்டியில், “50 சதவீத கமிஷன் கொடுத்து உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள்” என்றும் எழுதப்பட்டிருந்த்து.  பா.ஜ.க. ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் உள்ளிட்ட நகரங்களில் பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

மாநிலத் தலைநகர் போபால், சிந்த்வாரா, ரேவா, சாத்னா உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டியை நிர்வாகம் உடனடியாக அகற்றியது. இந்த சுவர் விளம்பரத்தை அடுத்து டிஜிட்டல் பணபரிவர்த்தனை நிறுவனமான “போன் பே” காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று சட்டவிரோதமாக தங்கள் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

அந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் பணம் பெறுவதற்காக பயன்படுத்தி வந்த “க்யூ ஆர்” குறியீட்டுடனும் சுவரொட்டி வெளியிடப்பட்டதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியின் மேல் பகுதியில் “போன் பே” என்றும் குறிப்பிட்டிருந்ததாக சொல்லப் படுகிறது.

தங்கள் நிறுவனத்தின் பெயர், சின்னம் ஆகியவற்ற மூன்றாவது நபர் அது அரசியல் சார்புள்ள நிறுவனமாக இருந்தாலும் சரி இல்லைவிட்டாலும் சரி பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கோ அல்ல அரசியல் கட்சியின் பிரசாரத்துக்கோ துணை போகவில்லை என்று போன் பே நிறுவனம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

“போன் பே” என்பது எங்கள் நிறுவனத்தின் பதிவுபெற்ற வர்த்தக முத்திரையாகும். இதை சட்டவிரோதமாக பயன்படுத்துவோர் மீது அறிவுசார் சொத்துரிமையின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சுவரொட்டிகளை மாநில காங்கிரஸ் கட்சி தாமாக முன்வந்து அகற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் எதிரணியான காங்கிரஸ் கட்சிக்கும் சுவரொட்டி போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் “கமிஷன் வாங்கும் நாத்தை (கமல்நாத்) தேடி வருகிறோம்” என்று நகரில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. பா.ஜ.க.வினர்தான் இந்த சுவரொட்டியை ஒட்டியதாக மாநில காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால், பா.ஜ.க. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள சுவரொட்டி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக படாவ் போலீஸார் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்து அதற்கு காரணமானவர்களைத் தேடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com