தன் பணியாளருக்கு 1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசளித்த முகேஷ் அம்பானி.

தன் பணியாளருக்கு 1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசளித்த முகேஷ் அம்பானி.
Published on

தொழிலதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு 1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாகக் கொடுத்து அதிர்ச்சியூட்டியுள்ளார். 

முகேஷ் அம்பானி என்ற பெயர் வணிகம் மற்றும் தொழில் முனைவோர் உலகில் பிரபலமாக எதிரொலிக்கும் ஒன்றாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாகவும், உறுதி மற்றும் கடின உழைப்பின் மூலம் எதை வேண்டு மானாலும் சாதிக்கலாம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறார். 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பு கொண்ட அம்பானி, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக பணக்காரர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோவின் எழுச்சிக்கு வழி வகுத்த அவரது புதுமையான வணிக யுக்திகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கு பார்வைக்காக மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுபவர். 

தன் தொழிலாளர்களுக்கு எப்போதுமே நலத்திட்டம் சார்ந்த அறிவிப்புகளை வழங்குவதில் தாராள மனப்பான்மையுடையவர். தற்போது தனது நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் அவருடைய நண்பர் ஒருவருக்கு 1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசளித்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த பரிசு பெற்றவர் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் மனோஜ் மோடி என்பவராவர். இவர் அந்த நிறுவனம் தொடங்கிய முதலே அதில் பணியாற்றி வருகிறார். முகேஷ் அம்பானியின் தந்தை ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தியபோதே பணியில் சேர்ந்துவிட்டார் மனோஜ் மோடி. 

முகேஷ் அம்பானியும் மனோஜ் மோடியும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக இணைந்து கெமிக்கல் டெக்னாலஜி படித்தவர்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மனோஜ் மோடி, முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீடா அம்பானியின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். தற்போது முகேஷ் அம்பானியின் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்துவரும் இவர், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திலும் இயக்குனராக இருக்கிறார். தன்னை எப்போதுமே ஒரு எளிய மனிதராக காட்டிக்கொள்ளும் மனோஜ் மோடி, ரிலையன்ஸ் நிறுவனம் செய்த முக்கிய ஒப்பந்தங்களுக்கு மூளையாக செயல்பட்டவர். 

இத்த மனோஜ் மோடியின் குடும்பத்தினர் விரும்பும் வகையில் வடிவமைத்து வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் அம்பானி. வீட்டிலிருக்கும் பர்னிச்சர்கள் இத்தாலி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டவை. குறிப்பாக, இந்த வீட்டிலிருக்கும் முதல் ஏழு தளங்கள் கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 14வது மாடியை அவரது அலுவலகமாகவும், 15 வது மாடியில் மருத்துவமனை போன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இது தவிர பார்ட்டி ஹால், விளையாட்டுத் திடல், தியேட்டர்கள், நீச்சல்குளம் போன்ற அனைத்துமே இதில் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீட்டில் பணியாற்ற சுமார் 175 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல இந்த கட்டிடத்திற்கு பாதுகாப்பை இஸ்ரேல் கம்பெனி ஒன்று கொடுத்து வருகிறது. ஒவ்வொரு மாடியும் 8000 சதுர அடி கொண்டு மொத்தம் 1.7 லட்சம் சதுர அடியில் இந்த மொத்த வீடும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு மனிதனுக்கு தேவையான ஒட்டு மொத்த விஷயங்களையும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட இந்த வீட்டின் பெயர் "கிறிஸ்டென்ட் பிருந்தாவன்" என்று வைக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com