முலாயம் சிங் யாதவ் காலமானார்!

Mulayam Singh Yadav
Mulayam Singh Yadav
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

த்தர பிரதேச மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்த முலாயம் சிங் சிங் யாதவ் இன்று காலமானார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் (வயது 83) கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். அவரது மகன் அகிலேஷ் யாதவும் அம்மாநில முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். சமீபத்தில் முலாயம் சிங் யாதவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில நாட்களாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று காலையில்  அவர் காலமானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com