மும்பை ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை - விசாரணையில் வெளியான திடுக்கிடும் திருப்பம், தொடரும் அதிரடி கைதுகள்!

மும்பை ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை - விசாரணையில் வெளியான திடுக்கிடும் திருப்பம், தொடரும் அதிரடி கைதுகள்!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியான மறுநாள் மும்பை ஐ.ஐ.டி வளாகத்திலும் தற்கொலை சம்பவம் நடந்திருந்தது. இது நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐ.ஐ.டி வளாகங்களில் ராகிங் தொல்லையால் முதலாண்டு மாணவர்கள் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை மும்பை மாநகர காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க ஆரம்பித்தது. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்நது நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் வெளியாகியிருக்கினறன. இது தொடர்பாக அவரோடு படித்த சக மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மும்பை ஐ.ஐ.டியில் பி.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த தர்ஷன் சோலங்கி, ஹாஸ்டலின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தலித் மாணவரான தர்ஷன் சோலங்கி, தங்குமிடத்தில் பல்வேறு ஜாதிக்கொடுமைகளை அனுபவித்ததாக நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தெரிவித்து வந்திருக்கிறார்.

தன்னை தற்கொலைக்கு முடிவுக்கு தள்ளிய நபராக அர்மான் இக்பால் காட்ரி என்னும் சக மாணவனை குறிப்பிட்டு எழுதியிருந்த தர்ஷன் சோலங்கி எழுதிய கடிதம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டார்.

தர்ஷன் சோலங்கி, இக்பால் காட்ரி இருவருமே கல்லூரியில் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஹாஸ்டலில் ஒரே தளத்தில் தங்கியிருந்திருக்கிறார்கள். இருவருக்கும் நடுவே மோதல் போக்கு இருந்திருக்கிறது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

தற்கொலை செய்வதற்கு முன்னர் தர்ஷன் சோலங்கி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் காட்ரி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், செக்ஷன் 306ன் படி,‘ சம்பந்தப்பட்டவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இக்பால் காட்ரிக்கு பின்னணியில்வேறு யாராவது இருக்கிறார்களே என்கிற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாதி ரீதியிலான கொடுமைகளின் காரணமாக தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி விசாரிக்க ஐ.ஐ.டி ஒரு விசாரணைக் கமிட்டியை அமைத்தது. இதில் பேராசிரியர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள்

உள்ளிட்டவர்கள் கமிட்டியில் பங்கேற்றார்கள். விசாரணையில் ஜாதிப் பிரச்னை எதுவுமில்லை என்று முடிவுக்கு வந்திருந்தார்கள்.

சக மாணவர் தன்னுடைய ஜாதிப் பெயரை சொல்லி கேலி செய்ததால் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்தான் உண்மை வெளியே வந்திருக்கிறது.

ஐ.ஐ.டி வளாகங்களில் ஜாதியப் பாகுபாடு, மொழி பாகுபாடு நிறைந்திருப்பதாக பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. புதிய இடம், மன அழுத்தம் ஆகியவற்றால் மாணவர்கள் தற்கொலை முடிவை நோக்கி தள்ளப்படுகிறார்கள். இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தர்ஷன் சோலங்கியின் தற்கொலை, இவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பார்க்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com